ஆதிதிராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த 1,000 விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம்
ஆதிதிராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த 1,000 விவசாயிகள் துரித மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.;
சென்னை,
1000 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் ரூ.23 கோடியே 37 லட்சம் செலவில் வழங்கப்படும். வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்க ரூ.42 கோடியே 50 லட்சம் மானியம் வழங்கப்படும்.
10 ஆயிரம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளநிலை மற்றும் முதுநிலைப் பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சிகள் ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
தொழில்திட்ட பயிற்சிகள்
2 ஆயிரம் ஆதிதிராவிட, பழங்குடியின மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில்திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும். 200 நிலமற்ற ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.
பழுதடைந்துள்ள 10 ஆதிதிராவிட பள்ளி மாணவர் விடுதிகளுக்கு ரூ.45 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். வாடகைக் கட்டிடங்கள், பழுதடைந்த கட்டிடங்களில் இயங்கிவரும் 5 ஆதிதிராவிட மாணவர் கல்லூரி விடுதிகளுக்கு ரூ.28 கோடியே 35 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
ரூ.17 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப் பள்ளிகள் ரூ.16 கோடியே 26 லட்சம் செலவில் மாதிரிப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
83 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூ.10 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும். 500 ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கறவைமாடுகள் வாங்க ரூ.2 கோடியே 25 லட்சம் மானியம் வழங்கப்படும்.
சிமெண்டு் விற்பனை நிலையம்
100 ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராக ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க ரூ.90 லட்சம் மானியம் வழங்கப்படும்.
50 ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு
ஆயிரம் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு மற்றும் புல் கறணைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோருக்காக தொழில்நுட்ப-பொருளாதார ஆய்வு மூலம் ரூ.1 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு ரூ.9 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறைகள் கட்டப்படும்.
கழிவறை-குளியலறை
305 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்குத் தேவையான அறைகலன்கள், தளவாடப் பொருட்கள் ரூ.7 கோடியே 46 லட்சம் செலவில் வழங்கப்படும். ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் கழிவறைகள், குளியலறைகள் கட்டப்படும்.
126 ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும். 7 ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்லூரி மாணவர் விடுதிகள் ரூ.3 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.
பள்ளிகளுக்கு எரிவாயு இணைப்பு
5 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் கலைப் பாடப்பிரிவுகள் ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும். 104 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 128 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் செலவில் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
13 மகாத்மா காந்தி தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார அங்காடிகள் அமைக்கப்படுவதற்கு ரூ.98 லட்சம் மானியம் வழங்கப்படும். பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிக்குச்சி மூலம் தளவாடப்பொருட்கள் தயாரிக்க ரூ.1 கோடியே 80 லட்சம் செலவிடப்படும்.
நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகியவற்றில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
50 ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் நூலகங்கள், இணையவழி நூலகங்கள் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு நிதி சார்ந்த தொழில்களில் ரூ.50 லட்சம் செலவில் பயிற்சி வழங்கப்படும்.
கண்காணிப்பு கேமராக்கள்
90 ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூ.50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஆதி திராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் ஆண்டுக்கு 3 முறை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும்.
20 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகள், 2 பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படும். அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஒளி, ஒலி ஆவணமாக பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.