மாமல்லபுரத்தில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 3 சிலைகள் மீட்பு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

மாமல்லபுரத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.

Update: 2022-05-05 12:57 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சட்டவிரோதமாக சிலைகள் பதுக்கிய விவகாரத்தில் கலை பொருட்கள் விற்பனைக் கூடத்தின் உரிமையாளரான ஜாவித்ஷா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாவித்ஷா கொடுத்த தகவலின் பேரில், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெளிநாட்டிற்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பார்வதி தேவி சிலை, சிவன் சிலை உள்பட 3 உலோகச் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்