"எனது உயிருக்கு ஆபத்து" - மதுரை ஆதினம் பரபரப்பு பேட்டி

எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக மதுரை ஆதினம் கூறியுள்ளார்.

Update: 2022-05-05 08:45 GMT
திருப்பனந்தாள்,

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான கஞ்சனூர் சுக்கிரன் தலத்திற்கு மதுரை ஆதீனம் முதன் முறையாக சுவாமி தரிசனத்திற்காக வந்தார். அவருக்கு கோயில் சார்பில் அவருக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை ஆதினம் கூறியதாவது:-

எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்கு ஒரு நபர் சொல்லிவிட்டார். தனக்கு மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருக்கிறது, இது தொடர்பாக பிரதமரை விரைவில் சந்தித்து பேச போகிறேன் என்றும் மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

மேலும் பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்வி கேட்டதற்கு இந்த கேள்வி வேண்டாம் என தெரிவித்தார்.

மதுரை ஆதீனம் இன்று கஞ்சனூர் கோவிலுக்கு வந்த நிலையில் ஊர் மக்கள் யாரும் அவரை வரவேற்க வரவில்லை. பா.ஜ க வினர் மட்டும் கோவிலுக்கு வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்