தொழிலாளியை சுத்தியலால் தாக்கி கொலைமிரட்டல்

பாகூர் அருகே வீடு புகுந்து தொழிலாளியை சுத்தியலால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2022-05-04 16:51 GMT
பாகூர் அடுத்த குருவிநத்தம் கிழக்கு புதுநகரை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 36). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்விக்கும், பக்கத்து தெருவை சேர்ந்த சிவானந்தம் மனைவி   அன்னபூரணிக்கும்  ஏலச்சீட்டு  தொடர்பாக சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதை அறிந்த அன்னபூரணியின் மகன் சிவகுமார் (32), ஜெயமூர்த்தி வீட்டுக்குள் புகுந்து அவரை சுத்தியலால்  தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் ஜெயமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஜெயமூர்த்தியின் தம்பி வீரமணி அளித்த புகாரின்பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்