போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு சான்று
சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.;
புதுச்சேரியில் முக்கிய சந்திப்புகளில் கோடை காலத்தில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாரை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏட்டு, போலீஸ்காரர்கள், ஊர்காவலர் படை வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், கணேசன், பிரான்சிஸ் தொம்னிக், மோகன்தாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.