குடும்ப தகராறில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.;
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை நகராட்சி, காரை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் சரிசெய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி (55). இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் விக்னேஷ் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரமேசுக்கும், கொளத்தூரை சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு லோகிதா (3) என்ற மகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்த ரமேஷ் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தூங்கசென்ற ரமேஷ் வீட்டில் உள்ள முன்பக்க அறையில் நேற்று அதிகாலை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகன் தூக்குப்போட்டுக்கொண்டதை பார்த்த அவரது தந்தை பன்னீர்செல்வம், தாய் குணசுந்தரி ஆகியோர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர். மகன் இறந்துவிட்டதை பார்த்த அவர்கள் தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பெற்றோரும் உயிரை மாய்த்தனர்
அதன்படி மகனின் உடலை இறக்கி வைத்து விட்டு அதே கயிற்றில் பக்கத்து அறையில் தாய் குணசுந்தரியும், தந்தை பன்னீர்செல்வம் புடவையிலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.