ஓசூரில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை - அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி, பூக்கள் சேதம்

சொக்கநாதபுரம் கிராமத்தில் பசுமைத் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி மற்றும் பூக்கள் சேதமடைந்தன.;

Update: 2022-05-01 18:29 GMT
கிருஷ்ணகிரி,

ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பேருந்து நிலையம் மற்றும் மலர் சந்தை ஆகிய இடங்களில் வானில் இருந்து பனிக்கட்டிகள் கீழே விழுந்ததால், பொதுமக்கள் கடைகளுக்குள் ஒதுங்கினர்.

இதே போன்ற பலத்த காற்று காரணமாக சொக்கநாதபுரம் கிராமத்தில் பசுமைத் தோட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளி மற்றும் பூக்கள் சேதமடைந்தன. பல இடங்களில் சாலைகளில் தேங்கிய மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியது. 

மேலும் செய்திகள்