சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை - உறவினர்களிடம் மாணவி உடல் ஒப்படைப்பு

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கவி பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;

Update: 2022-05-01 12:01 GMT
கோப்புப் படம்
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கவி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வந்த  கவி பிரியா என்ற மாணவி கடந்த 28-ந்தேதி விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்தது.

கவி பிரியாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி கவி பிரியாவின் உடலை வாங்க மறுத்து கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தினர் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் கவி பிரியாவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் கூறினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கவி பிரியாவின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்ததையடுத்து கவி பிரியாவின் உடலை பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர். 

தற்போது மாணவி கவி பிரியாவின் உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் புதூருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்