உழைப்பாளர் தினம்: ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலககெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இந்த உலகத்தையே தங்கள் தோள்களில் தாங்கி பிடித்து, தங்கள் கடின உழைப்பால் அதனை இடைவிடாது இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் அடையாள தினமான மே 1 உழைப்பாளர் தினத்தில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது
மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.