புதுவையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுவையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 263 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதுச்சேரியை சேர்ந்த 2 பேருக்கும், காரைக்காலை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரியில் ஒருவரும், வீடுகளில் 10 பேரும் என 11 தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் முதல் தவணை தடுப்பூசியை 143 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,409 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 269 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.