ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலருக்கு சரமாரி கத்தி குத்து - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்...!

ஸ்ரீபெரும்புதூர் திமுக கவுன்சிலரை கத்தியால் குத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-04-29 07:15 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியை சேர்ந்தவர் வீரா (வயது32). இவர் சமீபத்தில் நடந்த நகர் புற உள்ளாட்சி தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 11-வார்டு கவுன்சிலராக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். வீரா வெற்றி பெற்றவுடன் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சூப்பர் மார்க்கெட் கடைக்கு காரில் வந்தார். குழந்தைகள் காரில் இருந்தன. வீரா கடையில் பொருட்களை வாங்கி கொண்டு காரில் ஏறும் போது கனிமைக்கும் நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வீராவை தலை, கை, மார்பு ஆகிய பகுதியில் வெட்டியும்,குத்தியும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வீராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு வீராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து மரம் நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்