செம்மண் கடத்திய லாரி பறிமுதல்
செம்மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
மரக்காணம் அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் வருவாய் ஆய்வாளர் தினகரன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி செம்மண் ஏற்றி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் தினகரன் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சென்னை ஈச்சபாக்கம் பெத்தநகர் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (வயது 32) என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.