சாலையில் சண்டை - மாணவிகள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு
மாணவிகள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
சென்னை,
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் அரசு கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரி உள்ளது. இங்கு படித்து வரும் மாணவிகள் நேற்று கல்லூரி முடிந்ததும் புதுவண்ணாரப்பேட்டை பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்துகொண்டிருந்தனர்.
அப்போது இருதரப்பு மாணவிகளுக்கிடையில் பஸ் நிறுத்தத்திலேயே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடு்பட்டனர். .
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக கல்லூரி மாணவ, மாணவிகள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவிகள் போட்ட சண்டையை யரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதில் வைரலானது.
இந்நிலையில் சாலையில் சண்டை போட்ட மாணவிகள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது