குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்து; தந்தை-பச்சிளம் குழந்தை பலி..!
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் தந்தையும் 6 மாத பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் டேங்கர் லாரி நின்றுகொண்டு இருந்தது.
இந்நிலையில் மதுரை சேர்ந்த அஸ்வினிகுமார் (வயது 28 ) மற்றும் அவரது மனைவி சிவபாக்கியம் (வயது 23), அவரது மகள் திவானா (வயது 2) மற்றும் அவரது ஆறு மாத ஆண் குழந்தை ஆகிய குடும்பத்தினர் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு இன்று அதிகாலை மதுரை செல்ல சென்னையிலிருந்து தனது காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை கூட்ரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் நிலைதடுமாறி மோதிய விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த அஸ்வின்குமார் (28) மற்றும் அவரது 6 மாத ஆண் குழத்தை சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், அவரது மனைவி சிவபாக்கியம், மகள் திவானா 2 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடந்த நபர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.