ஆற்றில் மணல் அள்ளிய 4 பேர் கைது மினிவேன் பறிமுதல்
ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியாங்குப்பம்
ஆற்றில் மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.
மண் அள்ளிய...
தவளக்குப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள குடியாற்றில் மர்மநபர்கள் மணல் அள்ளுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் தலைமை காவலர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது 4 பேர் கொண்ட கும்பல் மினிவேனில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது. போலீசாரை கண்டதும் 4 பேரும், தப்பியோட முயன்றனர். இருப்பினும் போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்.
4 பேர் கைது
விசாரணையில் அவர்கள், அபிஷேகப்பாக்கம் அடுத்த சிங்கிரிகோவில் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்த ரஜினி (வயது36), வில்லியனூர் கோட்டைமேடு பொறையாத்தம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரூபன் லூர்துநாதன் (21), ராஜ்குமார் (28), சாரதி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.