இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த 4 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-22 23:48 GMT
ராமேஸ்வரம்,

கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையிலிருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகையும், படகில் இருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன் மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையில் இருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர்.

இவர்களை விசாரணை செய்த நீதிபதி, 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், மீனவர்களின் விசைப்படகு மீதான விசாரணை ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் எனவும், படகின் உரிமையாளர் படகிற்கான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்