ஹெல்மெட் அணிவது குறித்து எமதர்மன் வேடத்தில் நூதன முறையில் விழிப்புணர்வு
எமதர்மன் வேடமணிந்த நபர் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பாசக்கயிற்றை வீசி செல்பி எடுத்துக் கொண்டார்.;
சென்னை,
இருசக்கர வாகன விபத்துகளில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாதவர்கள் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் சென்னை போரூர் போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்து போலீசார் சார்பில், ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது ஹெல்மெட் அணியாமல் வரும் ஓட்டுநர்களை பிடித்து எமதர்மன் வேடம் அணிந்த நபர் அவர்கள் மீது பாசக்கயிற்றை வீசி செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.