டெல்டா மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு , மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது;

Update: 2022-04-21 07:38 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம்   இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி  மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் , டெல்டா  மாவட்டங்கள் ,அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் .

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு , மேகமூட்டத்துடன் காணப்படும் என  சென்னை வானிலை  ஆய்வு  மையம்  தெரிவித்துள்ளது 

மேலும் செய்திகள்