நீர்வளத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள் - முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
புதிய வாகனங்களை இன்று முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
சென்னை ,
2021-2022 ம்ஆண்டிற்கான நீர்வளத்துறை மானிய கோரிக்கையின்போது நீர்வளத்துறை பயன்பாட்டில் இருக்கக்கூடிய பழைய வாகனங்களுக்கு மாற்றாக 3 ஆண்டுகளில் புதிய வாகனங்கள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
அதன்படி சென்னை, தலைமை செயலகத்தில் ,நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை இன்று முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ .6.82 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .5 கார்கள் ,80 ஜீப் வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.