உடன்குடியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5 கொள்முதல் - விவசாயிகள் கவலை...!
உடன்குடியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.5-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளன;
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் முழுமுச்சாகநடந்து வருகிது. பனை,தென்னை மரத்துத்துதோட்டங்களில் ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடக்கிறது. கருவேல உடை மரங்களாக வளர்ந்து பகுதிகளில் உடை மரங்களை அழித்து விட்டு முருங்கை விவசாயம் நடக்கிறது.
முருங்கை வேகமாக வளர்ந்து வந்து, பல இடங்களில் கொத்துக்கொத்தாய் காய்க்கும் சீசன் வந்துவிட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் முருங்கைகாய் எல்லாம் கொஞ்சம் பழுப்பு நிறம் கலந்த கருப்பு நிறமாக மாறிவிட்டது.
இதனால் இந்த முருங்கைகாய்களை வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது. உடன்குடி பகுதியில் உள்ள கமிஷன் கடையில் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.7-க்கு கொள்முதல் செய்த முருங்கக்காய் தற்போது மேலும் விலை குறைந்து ஒரு கிலோரூ.5-க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர். இதை யாரும் வாங்குவதும் இல்லை என்பதால் கடைகளில் முருங்கைகாய் தேக்கம் அடைந்து உள்ளது.