இறுதிக்கட்டத்தை எட்டும் கூவாகம் திருவிழா... இன்று தாலி கட்டிக் கொள்ளும் முக்கிய நிகழ்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் கூவாகம் கிராமத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், திருநங்கைககள் தாலி கட்டிக் கொள்ளும் முக்கிய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்வர்.