அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தல்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான முதல்கட்ட தேர்தல் 21-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.;

Update: 2022-04-18 23:03 GMT
சென்னை,

அ.தி.மு.க.வில் ஒன்றியம், பகுதி உள்பட அனைத்து பொறுப்புகளுக்கும் உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. இதில் முதற்கட்டமாக 37 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் உள்பட நிர்வாகிகள் தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

முதற்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள், தேர்தலை கவனிக்கும் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-

வடசென்னை வடக்கு (கிழக்கு)- முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அ.தி.மு.க. வர்த்தகர் அணி இணை செயலாளர் எம்.ஜாபர் அலி, வடசென்னை வடக்கு (மேற்கு)- முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பி.கே.வைரமுத்து, வடசென்னை தெற்கு (மேற்கு)- முன்னாள் அமைச்சர் சி.ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தென்சென்னை வடக்கு (மேற்கு)- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, தென்சென்னை தெற்கு (கிழக்கு)- தஞ்சை வடக்கு மாவட்ட அவைத்தலைவர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.என்.ராமச்சந்திரன், தென்சென்னை தெற்கு (மேற்கு)- அ.தி.மு.க. வக்கீல் பிரிவுத் தலைவர் வி.எஸ்.சேதுராமன், தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சென்னை புறநகர்- முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் ஏ.சுப்புரத்தினம், திருவள்ளூர் கிழக்கு- முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பி.எஸ்.அருள், திருவள்ளூர் மத்தியம்- முன்னாள் அமைச்சர்கள் என்.தளவாய்சுந்தரம், கே.டி.பச்சைமால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜான் தங்கம்.

விருப்ப மனு கட்டணம்

மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட ரூ.25 ஆயிரமும், மாவட்ட அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், பொருளாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ரூ.5 ஆயிரமும் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பொறுப்பாளர்களிடம் இந்த கட்டணத்தை செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அவர்களிடம் வழங்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்