வருவாய்த்துறை சான்றிதழ்களை செல்போன் மூலமாகவே மக்கள் பெற நடவடிக்கை
வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றிதழ்களை செல்போன்களிலேயே மக்கள் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்து அத்துறையின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
இந்த துறைதான் அனைத்து துறைகளுக்கும் தாய் துறையாக அமைந்துள்ளது. வருவாய் தன் துறையை வேகப்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் எனக்கு அறிவுறுத்தி உள்ளார்.
வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் கூட, துறை அதிகாரியை அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்கிறோம். அதன்படி, தாசில்தாரையும், மற்றொரு அதிகாரியையும் இடைக்கால பணிநீக்கம் செய்து இருக்கிறோம்.
எங்கள் கவனத்திற்கு என்ன வருகிறதோ, அதை உடனே செய்கிறோம். எதையும் கண்டுக்காமல் விடுவது கிடையாது.
முழு கணினி மயம்
வருவாய்த்துறை என்பது சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்தே இருக்கிறது. 9 விதமான சான்றிதழ்களை மக்கள் கேட்கின்றனர். அதை இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கேட்கிறோம். ஆனால், முறையாக இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் கிடைக்கிறதா என்றால் இல்லை.
மறுபடியும் வி.ஏ.ஓ, தாசில்தாரை பார்க்க வேண்டியது உள்ளது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக இத்துறை செயல்பாடுகளை விரைவுபடுத்த முழுமையாக கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். தற்போது ஓரளவு மட்டுமே கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
செல்போன் மூலமாகவே...
சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க இ-சேவை மையம் செல்லாமல், செல்போன்கள் மூலமாகவே சான்றிதழ்களை விண்ணப்பித்து பெற நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். இதை சவாலாக எடுத்துகொண்டு முழுமையாக கணினி மயமாக்க உள்ளோம். எதிர்காலத்தில் தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லாத ஒரு நிலை ஏற்படும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதியோர் ஓய்வூதியம் நிறைய கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது வரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 149 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுத்துள்ளோம். முதியோர் ஓய்வூதியம் தருவதில் வரையறை இல்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் தர வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
காலி பணியிடங்கள்
சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் வி.ஏ.ஓ, ஆர்.டி.ஓ. பதவியிடங்கள் காலியாக உள்ளன. பணியிடங்களை நிரப்பிய பின்னரே நீங்கள் நினைக்கும்படி விரைவாக பணி நடக்கும்.
பேரிடர் மேலாண்மையை பொறுத்தவரை பேரிடர் வந்த பிறகு செல்லாதீர்கள், பேரிடர் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மழைபெய்த போது எச்சரிக்கையாக இருந்ததற்கு காரணம் அவரது அறிவுரைதான். 2015-ம் ஆண்டில் இரவில் ஏரியில் தண்ணீர் திறந்துவிட்டதால் தான் பிரச்சினை ஏற்பட்டது. இந்தமுறை முன்னெச்சரிக்கையாக இருந்ததால் சேதாரம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தோம்.
மத்திய அரசு நிதி
புயல், வெள்ளம் போன்ற பேரிடர் நேரத்தில் ஒன்றிய அரசாங்கத்திடம் நாம் பணம் கேட்டோம். மொத்தம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால், வெறும் ரூ.7,040 கோடி மட்டும் தான் கொடுத்துள்ளார்கள். எப்போதுமே மத்திய அரசு நாம் கேட்பதை கொடுப்பது இல்லை.
சில இடங்களில் இருந்து யாருடைய வீட்டையும், குடிசையையும் காலி செய்ய சொல்லும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆனால், கோர்ட்டுதான் காலி செய்ய வேண்டும் என கூறுகிறது. வேறுவழியில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே, கொள்கை ரீதியான முடிவை எடுக்கும் நிர்பந்தம் வருகிறது. பட்டா எவ்வளவு வேகமாக கொடுக்க முடியுமோ அவ்வளவு வேகமாக கொடுத்து வருகிறோம்.
இவ்வாறு பேசினார்.