நண்பரிடம் பேசாததால் ஆத்திரம் - தனியார் நிறுவன சூப்பர்வைசருக்கு அடி உதை..!

கோவை அருகே நண்பரிடம் பேசாததால் தனியார் நிறுவன சூப்பர்வைசரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-18 16:20 GMT
கோவை:

கோவை துடியலூரரை அடுத்த கே. ன். ஜி புதூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). இவர் தனது உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் வெங்கடேசனுக்கு அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெங்கடேஷ் திடீரென மகேஷிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் வெங்கடேசின் தாயார் மகேசை கண்டித்துள்ளார். 

இதனை மகேஷ் தனது நண்பர்களான மோகன்ராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட அவர்கள் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று மகேஷிடம் ஏன் பேசுவதில்லை எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ் மற்றும் சுரேஷ் அவரை தகாத வார்த்தையால் திட்டி அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து வெங்கடேசை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வெங்கடேஷ் துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்