சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளி கைது...!

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-18 03:00 GMT
ஜெயங்கொண்டம், 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருதுல மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவா. இவர் பெண்ணாடம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.

சிவாவுக்கு ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இருவரும் போனில் பேசி கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த தகவல் பெற்றோருக்கு தெரிந்ததும் சிறுமியை கண்டித்து வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்து உள்ளனர். இதனை அறிந்த சிவா திருமணம் செய்து கொள்வதாக  சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திற்கு அழைத்து வந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள தனது சித்தி வீட்டில் சிறுமியை தங்க வைத்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தா.பழூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகார் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை மீட்டு சிவாவை கைது செய்தனர். 

மேலும் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிவாவை போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்