திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினசரி உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா இன்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.