முதல்வருக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவர் இன மாணவிகள்!
ஆவடியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
ஆவடியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர். ஆவடி நரிக்குறவர் குடியிருப்புக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜாப்பூ வழங்கினர். மேலும், பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாசி மணி அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.