தஞ்சாவூர்: பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!

தஞ்சாவூர் அருகே பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Update: 2022-04-15 07:15 GMT
திருப்பனந்தாள், 

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரை சேர்ந்த முருகன் மகன் குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்கிய திருச்சி காவலர் பயிற்சி முகாமில் ஒரு மாத காலமாக பயிற்சி பெற்று வந்துள்ளார். 

தற்போது தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் குமார் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது வாடகை பாத்திர குடோனில் மர்மமான முறையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து கிடந்தார்.

இதனை அறிந்த பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமாரின் உடலை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்