கோயம்பேட்டில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் - திருமாவளவன்

கோயம்பேட்டில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-04-14 15:25 GMT
சென்னை,

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு  செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன்.அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே  திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். 

எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு  அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம்  அம்பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்