கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னர் மாளிகையில் பாரதியார் சிலையை திறந்து வைத்தார்.

Update: 2022-04-14 13:15 GMT
சென்னை,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாரதியார் திறப்புவிழா நடைபெற்றது. இந்த திறப்புவிழாவில் கலந்துகொண்ட தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பாரதியார் சிலையை திறந்துவைத்தார். 

கவர்னர் மாளிகையை பெறுத்தவரை சுதந்திரத்திற்காகவும், தமிழுக்காகவும், பெண் உரிமைக்காகவும் போராடிய தலைவர்களின் சிலை ஏற்கெனவே கவர்னர் மாளிகையில் வைக்கப்பட்டு இருந்தது. ஔவையார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலை கவர்னர் மாளிகையில் திறக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது பாரதியார் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திமுக, விசிக, காங்கிரஸ், கம்ப்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன. அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளன. 

மேலும் செய்திகள்