காதல் மன்னன் குண்டர் சட்டத்தில் கைதானார்: போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை

சென்னையில் 20 பெண்களை காதலித்து, அவர்களின் கற்பை சூறையாடிய புகாரில் சிக்கிய காதல் மன்னன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update: 2022-04-13 23:14 GMT
சென்னை,

சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ்சாலை பகுதியில் வசித்தவர் முகமது செய்யது (வயது 26). விளம்பர படங்களில் நடித்து வந்த இவர், தன்னுடன் நடித்த மாடலிங் பெண்களை காதலிப்பது போல நடித்து, அவர்களின் கற்பை சூறையாடியதாக பாதிக்கப்பட்ட 3 பெண்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தனர். பெரும் காதல் மன்னனாக வலம் வந்த மாடல் அழகர் முகமது செய்யதுவிடம், 20 பெண்கள் வரை மோசம் போய் இருப்பதாகவும் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டது.

போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மேற்பார்வையில், வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் விசாரித்தனர். காதல் மன்னன் முகமது செய்யது மீது கற்பழிப்பு உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முகமது செய்யது கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட் டார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

காதல் மன்னன் முகமது செய்யது மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்க, உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் சிபாரிசு செய்தனர். அதை ஏற்று முகமது செய்யது மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி குண்டர் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முகமது செய்யது, ஒரு ஆண்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்