கொரோனா வைரஸ் எந்த வடிவில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் - மா.சுப்பிரமணியன் பேச்சு
கொரோனா வைரஸ் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
சென்னை,
சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர் ஒமைக்ரான் எக்ஸ்-இ தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். இது சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
எக்ஸ்-இ வைரஸ்
கொரோனா வைரஸ் வேகம் குறைந்து மக்கள் நிம்மதியாக இருக்கும் நிலையில் தற்போது வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. ஒமைக்ரான் எக்ஸ்-இ என்று சொல்லக்கூடிய இந்த வைரஸ் ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது.
இந்த வைரஸ் ஜூன் மாதத்தில் இந்தியாவில் பரவக்கூடும் என்று சொல்லப்படுகிறது. எனவே தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தொய்வு இருப்பது போல் தெரிகிறது. சுமார் 2 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பல உருமாற்றத்துடன் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, ஒமைக்ரான் என பல பெயர் உருமாற்றத்துடன் 7 வகையான வைரசாக பரவி உள்ளது. தற்போது எக்ஸ்-இ என்ற வைரஸ் ஒமைக்ரானைவிட 10 சதவீதம் வேகமாக பரவுகிறது என்று சொல்லப்படுகிறது. வெளிநாடுகளில் இதன்பாதிப்பு தெரிகிறது. இங்கிலாந்தில் 627 பேருக்கு பாதிப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
பயப்பட தேவையில்லை
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி பதவி ஏற்றபோது கொரோனா தொற்று ஒருநாள் பாதிப்பு 25 ஆயிரத்து 435 என்கிற வகையில் இருந்தது. முதல்-அமைச்சர் எடுத்த பெருமுயற்சியால் 2-வது அலையும் முற்றுக்கு வந்தது, 3-வது அலையும் இல்லாமல் போய் கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் 50-க்கும் கீழாக தொற்று குறைந்துள்ளது. உயிர் இழப்பு எதுவும் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
சென்னை வந்திருந்த தடுப்பூசிக்கான ஆலோசனை குழு தலைவர் அரோராவை சந்தித்தேன். அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த வைரசால் பயப்பட தேவையில்லை என்று அவர் கூறியிருக்கிறார். குஜராத், மராட்டியத்திலும் பரவி உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அது எக்ஸ்-இ வைரஸ் என்று உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது, சர்வதேச விமான நிலையங்களுக்கு வருபவர்களை பரிசோதிக்க தொடங்கி உள்ளோம்.
முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
நாளை (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ரூ.365 கோடியில் 2,096 அதிதீவிர சிகிச்சை படுக்கை வசதிகளை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கி வைக்க உள்ளார். தடுப்பூசி போடும் பணியை ஒரு இயக்கமாக நடத்தி வருகிறோம். உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா உச்சத்துக்கு வந்தாலும் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி இயக்கத்தை மக்கள் ஒத்துழைப்புடன் தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரையில் 10 கோடியே 55 லட்சத்து 17 ஆயிரத்து 900 தடுப்பூசிகளை போட்டு இருக்கிறோம். இந்த அரசு வைரஸ் எந்த வடிவில் வந்தாலும் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து தயாராக உள்ளது.