தர்மபுரியில் முன்விரோதத்தால் விவசாயிக்கு கத்திக்குத்து
தர்மபுரியில் முன்விரோதத்தால் விவசாயிக்கு கத்திக்குத்து விழுந்தது.;
தர்மபுரி:
தர்மபுரி அருகே, வெள்ளோலை பகுதியை சேர்ந்தவர் ராஜவேல் (வயது42). விவசாயியான இவர் தனது பாட்டி தஞ்சம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் கிடைத்ததால், மனைவி மற்றும் மாமியாருடன் பாட்டியை பார்க்க நாயக்கன்கொட்டாய்க்கு சென்றார். அப்போது அங்கு முன்விரோதம் காரணமாக ராஜவேலுவை உறவினர் வேலு (42), அவரது நண்பர் கோவிந்தன் (38) ஆகியோர் கத்தியால் குத்தினார்கள். இதில் மயங்கிய ராஜவேலுவை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.