“உணவுத்துறையில் அரசுக்கு மாதம் ரூ.50 கோடி மிச்சம்” - அமைச்சர் சக்கரபாணி

உணவுத்துறையில் பல்வேறு குறைபாடுகளை நீக்கி, மாதம் ரூபாய் 50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-10 23:00 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. அரசின் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“தி.மு.க. அரசு, தமிழகத்தில் கட்சி பாரபட்சமின்றி 234 தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டப்பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியைப் போல் இல்லாமல் 110 விதியின்படி சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். 

உணவுத்துறையில் கடந்த கால ஆட்சியில் இருந்த பல்வேறு குறைபாடுகளை நீக்கி, மாதம் ரூபாய் 50 கோடி மிச்சப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 11 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்