மாணவர் மீது தாக்குதல்

விபத்து ஏற்படுத்தியதை தட்டிகேட்ட மாணவரை தாக்கிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-10 17:08 GMT
அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் ரோடு புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் அஜித் என்ற லோகநாதன், பிரவீன் ஆகியோர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவரை இடித்துள்ளனர். இதை அங்கிருந்த ஐ.டி.ஐ. மாணவர் ரிஸ்வான் (17) தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து ரிஸ்வானை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், பிரவீன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்