தமிழ் மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு..!!

தமிழ் பயன்பாடு அதிகரித்துள்ளநிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்படுள்ளது.

Update: 2022-04-10 06:21 GMT
கோப்புப்படம்
சென்னை, 

உலகெங்கும் வாழும் தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட வளர்ச்சியிலும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம், தமிழ் இணையக் கல்விக் கழகம் விருப்பம் கோரியுள்ளது. 

தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள் கருவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆங்கிலத்துக்கு இணையாக தமிழ் மொழியின் பயன்பாட்டை எளிதாக மாற்றும் வகையில் எட்டு வகையான மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைய தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க பிரபல மென்பொருள் நிறுவனங்களின் விருப்பங்களை கோரியுள்ளது. 

Image and speech recognitions for Tamil,  Tamil syntactic parser , POS and semantic role of labelling உள்ளிட்ட பல மென்பொருட்களை  தமிழ் இணையக் கல்விக்கழகம் வடிவமைக்கிறது

மேலும் செய்திகள்