தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-09 18:18 GMT
திருக்கனூர் அருகே உள்ள சோம்பட்டு பீமாராவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது 21). இவர் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் சூர்யபிரகாசின் தாய் மற்றும் சகோதரி திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் அருள்மொழிதாசன் (வயது 31). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காரைக்காலில் உள்ள உறவினர் சபரிராஜன் வீட்டுக்கு தாயார் அனுப்பி வைத்தார். 
அங்கு தங்கியிருந்து ஒரு ஓட்டலில் அருள்மொழிதாசன் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழிதாசன் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து திரு-பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்