தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
தாய், சகோதரி இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.;
திருக்கனூர்
திருக்கனூர் அருகே உள்ள சோம்பட்டு பீமாராவ் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது 21). இவர் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் சூர்யபிரகாசின் தாய் மற்றும் சகோதரி திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.