அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-04-07 20:12 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. ஆட்சியை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து, பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, வரலாறு காணாத வகையில் சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், இதற்கு காரணமானதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

சி.வி.சண்முகம் கைது

இந்நிலையில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் உள்பட 606 பேரை மதியம் 12.30 மணியளவில் போலீசார் கைது செய்து போலீஸ் வேன்கள் மற்றும் தனியார் பஸ்களில் ஏற்றினர்.

போலீஸ் வேன் சிறைபிடிப்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், சி.வி.சண்முகத்தை கைது செய்த போலீசாரை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். மேலும், சி.வி.சண்முகத்தை கைது செய்து ஏற்றிய வேனை அங்கிருந்து செல்ல விடாமல் அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த வேனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்