கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுசாரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-07 17:07 GMT
புதுச்சேரி புதுசாரம் பாலாஜி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கோரிமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், அவர் புதுசாரம் பாலான் நகரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, 175 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்