மாணவர்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட மாணவ-மாணவிகள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-04-05 17:45 GMT
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு நடனம், இசை மற்றும் நுண்கலை என 3 பட்டப்படிப்புகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 
இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தில் வருடந்தோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2004 முதல் 2022 வரை அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில் தற்போதைய பல்கலைக்கூட முதல்வர் நேற்று மாணவர்களிடையே இந்த கல்வியாண்டு முதல் நுண்கலைத்துறை அங்கீகாரம் பெற இயலாது என தெரிவித்துள்ளார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் முதல்வர் (பொறுப்பு) போஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் ஓயாது எனவும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

மேலும் செய்திகள்