ராமநாதபுரம்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து - போலீசார் விசாரணை....!
ராமநாதபுரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
முதுகுளத்தூர்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்று உள்ளது.
இந்த சுகாதார நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் சுகாதார நிலையத்தில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தால் சுகாதார நிலையத்தின் ஒரு கட்டிடம் சேதம் அடைந்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் என்று தீ பற்ற காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.