நாகூர் அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் படுகாயம்....!

நாகூர் அருகே சாலையோர பள்ளத்தில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-04-04 09:00 GMT
நாகை, 

நாகை மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் மீன்களை சரக்கு வாகனத்தில் கும்பகோணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு, பின்னர் அதே வாகனத்தில் ஊருக்கு திரும்பி வருவது வழக்கம். 

இதேபோன்று நேற்று மீன் வியாபாரத்தை முடித்துவிட்டு மினி வேனில் இவர்கள் நாகைக்கு  திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் வந்த மினிவேன்  ஒக்கூர் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் டிரைவர் கவியரசன் (வயது 29) மற்றும்  8 பெண்கள் காயம் அடைந்தனர். 

இதனை கண்டு விரைந்து வந்த அப்பகுதியினர், சரக்கு வேனில் சிக்கியிந்தவர்களை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

ஒக்கூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் கவியரசன், பெண்கள் கவினா (24), செல்ல மாள் (70), அஞ்சலி தேவி(31), அஞ்சலை அம்மாள் (40), லட்சுமி(60), செல்வராணி (55),கவிதா (26), சித்ரா (37) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்