தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
கொரோனாவிலிருந்து மீண்டு எழுவதற்குள் சொத்துவரி உயர்வு என்ற இடி மக்கள் மேல் விழுந்திருக்கிறது என்றும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.;
சென்னை,
ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை, ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை என அனைத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க., தற்போது சொத்துவரியை அபரிமிதமாக உயர்த்தி, வாக்களித்த மக்களுக்கு கூடுதல் சுமையை அளித்துள்ளது. தி.மு.க.வின் இரட்டை வேடத்துக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2018-ம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்துவரி உயர்த்தப்பட்டபோது அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின். இந்த சொத்துவரியை 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு திரும்பப் பெற்றதோடு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரி வரும் ஆண்டுகளில் சரிகட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்ளேயே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்துவரியை அபரிமிதமாக உயர்த்தி தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 100 சதவீதமும், வணிக நிறுவனங்களுக்கு 150 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரி என்பது மாநகராட்சியின் ஆண்டு மதிப்பு அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதால், அரசின் சொத்துவரி உயர்வு அறிவிப்பு குடிநீர் வரி உயர்வுக்கு தானாகவே வழிவகுக்கும். தமிழக மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டையொட்டி தி.மு.க.வால் அளிக்கப்பட்ட வெகுமதி இது.
கண்டனம்
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, நம்பி வாக்களித்த வாக்காளர்களிடம் இருந்து வரி வசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறது தி.மு.க. இந்த வரி உயர்வுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வரி உயர்வின் மூலம் சொந்த வீடுகளை வைத்திருப்போர் மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர். குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். கொரோனாவிலிருந்து மீண்டு எழுவதற்குள் மீண்டும் ஒரு இடி மக்கள் மேல் விழுந்திருக்கிறது.இந்த இடியை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலைமையில் மக்கள் இல்லை. மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை முதல்-அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
ஆர்ப்பாட்டம்
எனவே, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்துவரி உயர்வை முதல்-அமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இதை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க. நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.