ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து...!

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-04-01 16:00 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம்  அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி டாரஸ் லாரி ஒன்று சென்றது. அப்போது சென்னையிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி எதிரே வந்த டாரஸ் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் கன்டெய்னர் லாரி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சேதம் அடைந்த  லாரிகளில் இருந்த டீசல் கசிந்து சாலையில் பெருக்கெடுத்து  ஓடியது.

 இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விரைந்து வந்த  தீயனைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படமால் தடுத்து, விபத்தில் சிக்கிய வாகனத்தை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிள் வந்தவர் நூழிலையில் உயிர் தப்பினார். இதுபோன்று,  2 லாரிகளின் டிரைவர்களும்  லேசான காயகளுடன் தப்பினர். 

இந்த விபத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்