மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் தொடரும் தேடுதல் வேட்டை - மாயமான சிலைகளை தேடும் பணி தீவிரம்

மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளத்தில் அதிநவீன கருவிகளைக் கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2022-03-30 18:02 GMT
சென்னை,

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், புன்னை வனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை கடந்த 2004 ஆம் ஆண்டு காணாமல் போனது. கோவிலின் தெப்பக்குளத்தில் சிலை வீசப்பட்டு இருக்கலாம் என அரசு தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 14 ஆம் தேதி தீயணைப்புத்துறையினர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர்கள் மூலம் தெப்பக்குளத்தில் சிலையை தேடினர்.

இந்த தேடுதல் பணியில் இரட்டை பாம்பு சிலை, பிள்ளையார் சிலை உள்பட 3 சிறிய சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் மயில் சிலை இல்லை. 

இதனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குளத்தின் அடியில் சென்று சிலையை தேட சிலை கடத்தல் தடுப்பி பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன் அதிநவீன கருவிகளைக் கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்