அமைச்சர் இலாகா மாற்றம் தண்டனையா அல்லது பரிசா...? அ.தி.மு.க கேள்வி
அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? அமைச்சர் இலாகா மாற்றம் தண்டனையா அல்லது பரிசா...? என அ.தி.மு.க கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை:
அமைச்சர் ராஜகண்ணப்பன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பதுதான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? என ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கும், அத்துறையில் இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா? இது தண்டனையா அல்லது பரிசா? ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்?" என்று கேள்வி எழுப்பி உள்ளது.
அரசு அதிகாரி நேரடியாக புகார் செய்தும் இலாகா மாற்றம் என்பது தான் நீங்கள் வழங்கும் உட்சபட்ச தண்டனையா?
— AIADMK (@AIADMKOfficial) March 29, 2022
இது தண்டனையா அல்லது பரிசா?
ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை அவமதித்த அமைச்சர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககூட துணிவில்லாத நீங்கள் எப்படி சமூகநீதியை காப்பீர்கள்? @mkstalinpic.twitter.com/bBpJgs6M8i