இடைவிடாமல் 57 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்த சிறுவன்

தேனியை சேர்ந்த 14 வயது சிறுவன் தலைமன்னார்-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை இடைவிடாமல் நீந்தி சாதனை படைத்துள்ளார்.;

Update: 2022-03-29 07:57 GMT
ராமேஸ்வரம்,

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சினேகன். இவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தனூஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கும் பின் அங்கிருந்து மீண்டும் தனூஷ்கோடிக்கும் இடையேயான கடல் பகுதியில் இடைவிடாமல் நீத்தியுள்ளார். 

இதற்காக நேற்று மதியம் 1 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்தார். சுங்கத்துறை மற்றும் துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் 2 மணிக்கு சிறுவன் சினேகன் அரிச்சல்முனை கடல் பகுதியில் இருந்து தலைமன்னார் நோக்கி நீந்தத் தொடங்கினார். பின்னர் மாலை 5.15-க்கு இந்திய கடல் எல்லையை கடந்து இலங்கை கடல் பகுதியை நோக்கி நீந்தினார்.

இரவு தலைமன்னார் பகுதிக்கு சென்ற இந்த சிறுவன் மீண்டும் தலைமன்னார் பகுதியில் இருந்து நீந்தி  தனுஷ்கோடி வந்தடைந்தார். மொத்தம் 57 கிலோமீட்டர் தூரத்தை 14 வயது சிறுவன் இடைவிடாமல் நீத்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும் செய்திகள்