கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமுத பெருவிழா கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்

75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமுத பெருவிழா கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.;

Update: 2022-03-27 18:48 GMT
சென்னை,

இந்தியா முழுவதும் பல்வேறு அரசு துறை சார்பில் 75-வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னை மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் ‘சுதந்திர திருநாள் அமுத பெருவிழா' என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி தொடங்கப்பட்டது.

இந்த கண்காட்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பெருநகர சென்னை மாநகராட்சி கவுன்சிலர் லோகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

20 அரங்குகள்

இந்த கண்காட்சியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 20 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 7 நாட்கள் நடைபெரும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கண்டு களிக்கும் விதம் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்