வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

கோரிமேட்டில் வீச்சரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-27 17:28 GMT
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோரிமேடு நகராட்சி கட்டிடம் அருகே சென்றபோது அங்கு ஒரு வாலிபர் கையில் வீச்சரிவாளுடன் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களை மிரட்டினார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரோடியர் பேட் பகுதியை சேர்ந்த ஹமீது அப்துல் காதர் (வயது 19) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்